Type Here to Get Search Results !

நகராட்சி ராஜகோபால் கவுண்டர் பூங்கா வேலியை சுத்தம் செய்து வர்ணம் தீட்டிய தன்னார்வலர்கள்.

தருமபுரி நகரப்பகுதியில் பல்வறு சமூக னால பணிகளை தொடர்ந்து செய்துவரும் "மை தருமபுரி அறக்கட்டளை" அமைப்பினர் தருமபுரி புறநகர்  நிலையம்  அமைந்துள்ள நகராட்சி ராஜகோபால் கவுண்டர் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியின் ஒரு பகுதியில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களை தருமபுரி நகராட்சியுடன் இணைந்து மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்கள் (சனிக்கிழமை) இன்று போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்து அதற்கு வர்ணம் தீட்டினர். 

அழகான தூய்மையான தருமபுரியை உருவாக்கும் முயற்சியில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உள்ள சுவற்றை சுத்தம் செய்து படங்கள் வரையப்பட்டது‌. அதேபோல் நகராட்சி பூங்காவையும் மாற்றும் முயற்சியில் மை தருமபுரி தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies