தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அளவிலான கல்வி வளர்ச்சி நாள் விழா வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஜி கே மணி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவிற்கு தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு குணசேகரன் தலைமை தாங்கினார்.
பின்தங்கிய தர்மபுரி மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும் அதிலும் மிகவும் பின் அங்கே பெண்ணாகரம் பகுதி கல்வியில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த விழா இங்கு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் கண்டிப்பும், அரவணைப்பும் இருந்தால் தான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும் முடியும் எனத் தெரிவித்தார்.
தீவிரவாத சக்திகளை கூட தடுக்கக்கூடிய சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு ஆசிரியர்கள் சிற்பிகள் என குறிப்பிட்டவர் தமிழகத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு குணசேகரன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை போதிக்க வேண்டும் இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதாக குறிப்பிட்டவர் தர்மபுரி மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 34 அரசு பள்ளிகள் 100% பெற்றுள்ளதாக குறிப்பிட்டார் மேலும் அவர் பேசும்போது ஆசிரியர் தகுதி தேர்வு டிஎன்பிஎஸ்சி தேர்வு டெட் ஆகிய தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரிப்பவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் எனக்கு குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பின்தங்கிய பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 210 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது உண்மைதான், இதற்காக தமிழக அரசு தற்போது தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜிகே மணி வழங்கி பாராட்டினார், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


