தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் திருப்புத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து மண்டல அளவிலான புத்தாக்கப் பயிற்சி விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி கி. சாந்தி அவர்கள் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் திரு. எஸ்.நடராஜன் IAS அவர்கள் வேளாண்மை உற்பத்தி ஆணையர் திரு.சி.சமயமூர்த்தி அவர்கள் தேட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திருமதி.இரா. பிருந்தாதேவி IAS அவர்கள் வேளாண்மைத்துறை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை IAS அவர்கள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் பாமக சட்டமன்ற குழு தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.ம.யசோதா அவர்கள் தருமபுரி நகர்மன்ற உறுப்பினர் திருமதி.லட்சுமி அவர்கள் உடன் விவசாயி பெருமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

