பாலக்கோடு, சணார் தெருவில் வசிக்கும் அருண்குமார் பாலக்கோடு எம்.ஜி சாலையில் பேட்டரி கடை வைத்து தொழில் செய்து வருகிறார், நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார், வழக்கம்போல இன்று காலை மீண்டும் கடைக்கு வந்தார், அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லாபெட்டியில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டார், இது குறித்து அருண்குமார் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அந்த கட்சியில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது, அந்த காட்சிகளை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் கடையில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.