தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றித்துக்கு உட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சி ஏழு கிராமங்களை உள்ளடக்கியது, மாதந்தோறும் கலந்தாய் கூட்டம் இந்த நிலையில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிராம வளர்ச்சி பணிகள், சுகாதாரம் மேல்நிலை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தல்.
கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தல், சுகாதார மற்றும் தூய்மை காவலரின் பணியை கண்காணித்தல், ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து பணிகளையும் மக்கள் கோரிக்கைகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார்,துணைத் தலைவர் ஹரியன்ணன், வார்டு உறுப்பினர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

