தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் இந்திய எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை மருத்துவம் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 4 – ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன் பொருட்டு தருமபுரி எலும்பியல் சங்கம் சார்பாக அரூர் வட்டார காவல் துறையினர்க்கான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி மற்றும் எலும்பு உறுதி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30.07.2022), அரூர், அரசு மருத்துவமனையில் எலும்பு மூட்டு மருத்துவர்கள் மரு.அருண் பிரகாஷ் மற்றும் மரு.அரவிந்தன் தலைமையில் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் 20 – க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

