வெள்ளிச்சந்தை அருகே செலந்தியன அள்ளி ஊர் மாரியம்மனை சுமார் 50 வருடங்களாக பொதுமக்கள் சுயம்புவாக வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது புதியதாக கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து கடந்த 48 நாட்களாக மண்டல பூஜை செய்து வந்தனர்.
48 நாட்களும் தினசரி சுமார் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நிலையில் இரவு நேரங்களில் மகாபாரதம் நாடகங்களை நடத்தி ஊர் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் 48 வது நாளான நேற்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை காண பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு ஊர் மாரியம்மனை வணங்கிச் சென்றனர். மேலும் மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி நேற்று முழுவதும் 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

