தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுவபுரம் பஞ்சாயத்தில் இயற்கை வேளாண்மை உரங்கள் தயாரிக்கும் பணியை திட்ட இயக்குனர் பாபு அவர்களின் பரிந்துரையின் பேரில் உதவி திட்ட இயக்குனர் எஸ் கார்த்திகேயன், எஸ் ஆர் பி திவ்யதர்ஷினி. டி தங்கமணி வட்டார இயக்குனர் மேலாளர் எம்.ரமேஷ் ஆகியோர் இயற்கை பண்ணை தொழில் தொகுப்பு இயற்கை உயிரியல் உரங்கள் விற்பனை மற்றும் இ-சேவை மையத்தை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் 15 நபர்களுக்கு சுமார் 4 லட்சம் நிதி மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டன, இதில் இ-சேவை மையத்தை பஞ்சாயத்து தலைவர் ஜெயராமன் பழனியம்மாள் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.

