இந்நிலையில் பிக்கன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதிசுப்பிரமணி அவர்களின் உரிய நடவடிக்கையால் வெள்ளிச்சந்தையில் உள்ள மொரப்பூர்-மாரண்டஅள்ளி சாலையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்ப சேகரன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் ரூபாய் 1.60 கோடி மதிப்பீட்டில் வெள்ளிச்சந்தையில் இருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 700 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிச்சந்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த மழை நீர் வடிகால் கால்வாயை அமைத்துக் கொடுப்பதன் மூலம் எங்களின் 30 வருட கால பிரச்சனையை தீர்த்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

