தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி கிராமம் அடுத்து அமைந்துள்ள உள்ள ஒரு கிரசர் குவாரியின் அருகே சுமார் 48 வயது மதிக்க இரு ஆண்கள் சடலம் கிடப்பதாக அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது, கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு சுமார் 48 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் சடலங்கள் இருந்தது, சடலத்தின் அருகில் கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றும் இருந்தது அதனருகில் முட்புதரில் 3 செல்போன்கள், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் அடையாள அட்டையை ஆராய்ந்ததில் இறந்து கிடந்த நபர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிவகுமார்பாஹி மற்றும் கோழிக்கோடு பகுதியை நிவில்குரூஷ் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து இவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

