Type Here to Get Search Results !

இரயில்வே வேலை; 19 இலட்சம் மோசடி; 3பேர் கைது.

மாதிரி படம். image source : google
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 29). எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (30) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக சந்தோஷ்குமார் அவரிடம் கூறியுள்ளார்.  இதற்காக ரூபாய். 19 இலட்சம் செலுத்தவேண்டி வரும் என கூறினார், இதை நம்பி சந்தோஷ் ரூ.19 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சில நாட்களில் சந்தோசுக்கு போலியான பணி நியமன ஆணையை சந்தோஷ்குமார் வழங்கி உள்ளார்.

அந்த பணி நியமன ஆணை போலியானது என அறிந்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் இந்த மோசடி தொடர்பாக தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர், இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ராஜ்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேர் மீது தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies