இப்பணியிடங்களில் தமிழகத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களுக்கு 33 காலிபணியிடங்களும், போர் மற்றும் போரை ஒத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர் மற்றும் போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுகளுக்கு 10 காலி பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் தேர்வாளர்களின் வயது வரம்பு குறைந்த பட்சம் 20 வயது மற்றும் அதிக பட்சம் 28 வயதுடையராக இருத்தல் வேண்டும். ஆனால்முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள வயது சலுகையின்படி அவர்களுக்கு தற்போதைய வயதுடன் இராணுவத்தில் பணியாற்றிய மொத்த பணிக்காலம் மற்றும் 3 ஆண்டுகளை கழித்தம் செய்துகுறைந்த பட்சம் 20 வயதும் அதிக பட்சம் 28 வயதுடையவராய் இருத்தல் வேண்டும்.
எனினும் 50 வயது வரையுடைய முன்னாள் படைவீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். மேலும் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு 08 ஆண்டுகள் வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் காயமுற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்கள் www.ibps.in என்ற இணையதளத்தினை பார்வையிட்டு 21.07.2022க்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறும், மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்.04342-297844 -க்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

