இச்சதுரங்க போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற பள்ளிகள் அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று வட்டார அளவிலான சதுரங்கபோட்டிக்கு தேர்வு பெற்ற 3000-த்திற்க்கும் மேற்ப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிகள் நடைபெறுவது குறித்து "நம்ம செஸ் நம்ம பெருமை" பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், பல்வேறு துறைகளின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் (20.07.2022) பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் (செஸ் போட்டிகள்) தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்வி வட்டாரங்களான தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் ஆகிய 8 கல்வி வட்டாரங்களிலும் நடைபெற்றது.
இச்சதுரங்க போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற பள்ளிகள் அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்று வட்டார அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு பெற்ற 3000-த்திற்க்கும் மேற்ப்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனித்தனியாக 6-8ஆம் வகுப்பு, 9-10ஆம் வகுப்பு மற்றும் 11-12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களில் ஒவ்வொரு வகுப்பு பிரிவிற்கும் முதல் 3 இடங்கள் வீதம் மொத்தம் 3 வகுப்பு பிரிவுகளுக்கு 9 மாணவர்களும், 9 மாணவியர்களும் என மொத்தம் 18 மாணவ, மாணவியர்கள் வீதம் 8 கல்வி வட்டாரங்களிலும் மொத்தம் 144 மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு வருகின்ற 25.07.2022 அ மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் சென்னையில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகளை நேரில் காணும் வாய்ப்பினை பெற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராஜகோபால், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.ஜெ.முத்துக்குமார் உட்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

