தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து E.அக்ரஹாரம் கிராமத்துதில் இயங்கி வரும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக தர்மபுரி K-வெற்றி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லமாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பயிலும் 50 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பள்ளிக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
இதில் K-வெற்றி தொண்டு நிறுவனம், தலைமையாசிரியர் S.பழனியம்மாள், நாகராஜ் ஊர் கவுண்டர், கோவிந்தராஜ் தர்மகர்த்தா, மாவட்ட தீயணைப்பு அலுவலர்(ஓய்வு ) தீ.மதியழகன், தீ. திருப்பதி இந்திய ராணுவம் (ஓய்வு), மற்றும் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் ரா. திருவருட் செல்வம், இரா.அண்ணாசாமி, நா. சின்னமணி, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

