தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா அவர்கள் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

