பென்னாகரம் அருகே, வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ முத்தையன் சுவாமி கோயில். இந்த கோவிலில் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்தனர்.
மேலும் அண்டை மாவட்டமான சேலம் மாவட்டத்தின், மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து, இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும், சுவாமி ஊர்வலத்தின்போது குறுக்கே படுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

