தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தை சார்ந்த பிரபு, இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபு முத்தனூர் அருகே அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் பிணியாற்றிருக்கிறார். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் அடிமையாகியுள்ளார். இதனால் சுமார் ரூ.15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துவிட்டார், மேலும் கேரளா லாட்டரியில் ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துவிட்டார்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது சொந்த வீட்டை விற்க முயற்சித்து அதிலிருந்து வந்த முழுத்தொகையையும் ஆன்லைன் ரம்மியில் விளையாடுவதற்கு பயன்படுத்தியுள்ளார், இதில் மொத்த பணத்தையும் இழந்த பிரபு தற்கொலை செய்துகொண்டார் என பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது போல பல மரணங்கள் தமிழகத்தில் நடைபெற்றுவருவது அதிகரித்துள்ளது, எனவே இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேரளா லாட்டரி விற்பனையை தமிழகத்தில் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வாய்த்துள்ளனர்.

