Type Here to Get Search Results !

கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர வேண்டுமா?


தருமபுரி மாவட்டதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும் மற்றும் 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன.

இவ்விடுதிகளில் சேர விரும்பும் தகுதியான கல்லூரி மாணவ, மாணவியர்கள உடன் விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தருமபுரி அரசு கலைக்கல்லூரி அருகில் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும். 2 கல்லூரி மாணவியர் விடுதிகளும் மற்றும் காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டியில் ஒருகல்லூரி மாணவியர் விடுதி என மொத்தம் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும் மற்றும் 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் கல்லூரியில் பயிலும் மாணவ. மாணவியர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கலாம். அவ்வாறு ஆதிதிராவிடர் நல கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளர்களிடம் பெற்று கொள்ளலாம். விடுதியில் சேர்க்கப்படும் மாணவ மாணவிகளது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு (ரூபாய் இரண்டரை இலட்சம்) மிகாமல் இருக்க வேண்டும்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் ஆதார் எண் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து, மாணவ, மாணவிகளின் புகைப்படம் ஒட்டி அவ்விண்ணப்பத்தில் அவர் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் நேரில் வழங்க வேண்டும். 

மேற்படி விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி (05.08.2022) ஆகும். எனவே தருமபுரி மாவட்டதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும் மற்றும் 3 கல்லூரி மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. இவ்விடுதிகளில் சேர விரும்பும் தகுதியான கல்லூரி மாணவ, மாணவியர்கள் உடன் விண்ணப்பித்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies