ஒன்றிய மோடி அரசாங்கம் அரிசி மீது விதித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய மோடி அரசு சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் அரிசி கோதுமை பருப்பு மாவு வெல்லம் மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட உள்ளது இது மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது எனவே இந்த ஜிஎஸ்டி வரியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்ட விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பென்னாகரம் பகுதி குழு செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார், உறுப்பினர் வி மாதர், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே அன்பு, ஆர் ஜீவானந்தம், பால் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி எம் முருகேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
நிறைவாக மாவட்ட குழு உறுப்பினர் மா.சிவா நன்றி கூறினார் இதில் ஏராளமான கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

