Type Here to Get Search Results !

ஆடி அமாவாசை; ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் 18 வது நாளாக தடை நீடித்து வருகிறது இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று ஒகேனக்கல் காவேரி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க வாகனங்கள் மூலமாக வரும் பொதுமக்களை    மடம் சோதனைச்சாவடியில்   காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் தர்மபுரி மாவட்டத்திலுள்ள உள்ளூர் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க  தடையை மீறி   பேருந்து மூலமாக ஒகேனக்கல்  முதலைப்பண்ணை நாகர்கோயில் பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை,பச்சரிசி , தேங்காய், பழம்,  உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். 

பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.


.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies