இப்பள்ளிக்கு அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பென்னாகரம் சுற்றோட்ட பகுதி மற்றும் பி.அக்ரஹாரம் பகுதியில் பலத்த கன மழை பெய்தது. மாலை பள்ளிகள் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மாணவ, மாணவிகள் பேருந்துக்காக பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் பலத்த மழை பெய்து கொண்டிருந்தால் கூட பேருந்து நிக்காம சென்று விடும் என்ற பயத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நிலைந்தபடியே நீண்ட நேரம் மழையில் நின்று கொண்டிருந்தனர். அது மட்டுமில்லாமல் ஒரு சில மாணவர்கள் மரத்தின் அடியிலும் நின்று கொண்டிருந்தனர் எனவே இடி மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

