Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே கால்நடை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜங்கமையனூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மழைக்காலங்களில் ஆட்டு இனங்களுக்கு பரவும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு நடவடிக்கையாக பென்னாகரம் கால்நடை மருத்துவமனை சார்பில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடும் முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கால்நடை உதவி மருத்துவர் கிருபாகரன் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் முனைவர்  சத்தியநாராயணன், நோய் நிகழ்வியல் அலுவலர் முனைவர் ராஜாராமன், மண்டல இணை இயக்குனர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் உதவி இயக்குனர்கள் சண்முகசுந்தரம், மணிமாறன், பாப்பாரப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் சரவணன், தர்மபுரி கால்நடை உதவி மருத்துவர் ஜெரோம் சார்லஸ் மற்றும் திருப்பதி, கால்நடை ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் சரவணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தாமஸ் மற்றும் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் செங்கனூர் ஊராட்சியை சேர்ந்தசெங்கனூர், ஜங்கமையனூர், எர்கொல்லனூர், சின்னபள்ளத்தூர், பெரியபள்ளத்தூர், ராஜாவூர், மல்லாபுரம், நாகனூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு பயனடைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies