பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பள்ளி வளங்கள் சார்ந்தும், மாணவர்கள் கற்றல் ஆசிரியர்களின் கற்பித்தல் சார்ந்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
நீண்ட நாள் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் கண்டறிதல் அதற்கான காரணங்களை அறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல், நிதி ஆதாரங்களை பயன்படுத்துதல், தமிழக அரசால் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் சதுரங்க போட்டி பற்றிய விழிப்புணர்வு, கழிப்பறை, குடிநீர், பள்ளி வளாகம் பராமரிப்பு உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர், கூட்டத்தில் பெற்றோர்களும் மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

