சென்னை, மாமல்லபுரத்தில் வருகின்ற 28.07.2022 முதல் 10.08.2022 வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு வந்த மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை (Chess Olympiad Symbolic Torch) மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி பெற்று, தருமபுரி மாவட்ட தடகள வீரர் வீரமணி அவர்களிடம் வழங்கி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 200 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்த மாதிரி செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டமானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி சேலம் - தருமபுரி முக்கிய சாலை, இலக்கியம்பட்டி, செந்தில்நகர், பாரதிநகர், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தது, செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியினை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர்தன. ராஜராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் திரு. ஜெயசீலன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். கிள்ளிவளவன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

