இண்டூர் அருகே உள்ள கும்பளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் கல்குவாரி கூலி தொழிலாளி, இவரது மகள் அருணா (வயது17). இவர் அருகே உள்ள பண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 23-ந் தேதி கடைசி பொதுத் தேர்வு எழுத சென்ற அருணா மீண்டும் வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு மகளை அவரின் பள்ளி தோழிகள் மற்றும் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
அருணா குறித்து விசாரித்ததில், அதே பகுதியை சார்ந்த ஆனந்த் என்பவர் அருணாவின் பின் சுற்றிக்கொண்டிருந்தை அறிந்த பெற்றோர், ஆனந்த் தான் தன் மகளை கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.
காவல்துறையின் விசாரணையில் ஆனந்த் மாணவி அருணாவிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது, பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் அவர்களை அழைத்துவந்து விரித்து, இளம்பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக அவர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

