Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், முருகன், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர்கள் சிவசக்தி, ஐவண்ணன், முரளி, ஷோபன், கிருத்திகா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மண்டல தலைவர் கணபதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினர். பாப்பாரப்பட்டி பாரதமாதா நினைவாலயம் என்ற பெயரை மாற்றி பாரத மாதா திருக்கோவில் என பெயர் சூட்ட வேண்டும். எண்ணேகொள் புதூர் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வாணியாறு இடதுபுற கால்வாயை நீட்டிப்பு செய்து ராமியனஅள்ளி வழியாக கடத்தூர் ஒன்றியம் முழுவதும் நீர் பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தீர்த்தமலையை சுற்றுலா தலமாக அறிவித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அருணகிரி, மாவட்ட தலைவர் இமானுவேல், மாவட்ட அணி தலைவர்கள் மவுனகுரு, டாக்டர் சுப்ரமணியம், காவேரிவர்மன், வெற்றி, சங்கீதா, கண்ணன், இளைஞரணி மாநில நிர்வாகி புவனேஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies