தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவரும் இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இப்பள்ளியில் உள்ள ஆசிரியர் பன்னீர்செல்வம், மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக அவ்வப்போது புகார்கள் வந்தநிலையில் 12வயது மாணவியின் கன்னத்தை கிள்ளி உள்ளோர் அதே போல் மேலும் 2 மாணவிகளின் கன்னத்தையும் கிள்ளி உள்ளார்.
இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியதையடுத்து அம்மாணவிகளின் பெற்றோர்கள் தருமபுரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அழைத்து விசாரணை விசாரித்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

