நல்லம்பள்ளி அருகே பெட்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் இராமச்சந்திரன். இவரது மகன் லோகேஷ்(வயது 19). கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் நீட் தேர்வு தேர்வு மையம் ஒன்றுக்கு லோகேஷ் சென்றார்.
அங்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் செல்போன்களை லோகேஷ் திருடியுள்ளார். இதுகுறித்து தேர்வு மையம் சார்பில் தரப்பட்ட புகாரின்பேரில் அத்தியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் லோகேசை கைது செய்தனர்.

