இதற்கு இடையில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பவர் கடந்த 2020ம் ஆண்டு சிறுமிஇடம் திருமணம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் திருமணம் செய்துகொண்டு திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தனது தாயுடன் கூலிவேலைக்கு சென்று வந்த சிறுமி அஞ்செட்டியை சேர்ந்த பூபதி 23, என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனை கணவர் விஜய் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த, 15ம் தேதி பூபதி சிறுமியை ஒசூருக்கு அழைத்து சென்று விஜய் கட்டிய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு பூபதி புதிய தாலி ஒன்றை கட்டி திருணம் செய்து கொண்டனர். இது குறித்து மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் கணவர் விஜய் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஒசூரில் தங்கியிருந்த சிறுமி மற்றும் பூபதியை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுமியை, 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டதால் விஜய் மற்றும் பூபதி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

