இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் க. செல்வவிநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார், வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் கண்ணுச்சாமி, வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், திருமதி. K. வான்மதி, தர்மபுரி சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.J. சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ/மாணவியர்களுக்கு ஏற்படும் மனநலம் உடல்நலம் சம்மந்தமான குற்றங்கள் இணைவழி குற்றங்கள், குழந்தை திருமணம், இணைவழி விளையாட்டுகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வங்கி கடன், இணையவழி வணிகம் போன்றவற்றில் எவ்வாறு முறைகேடான முறையில் ஏமாற்றுகின்றனர் என்பதை பற்றியும் அதனை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து மாணவ/மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கணினி அறிவியல்துறை உதவிப்பேரசிரியர் திருமதி. M. பாரதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

