ஊராட்சி மன்ற தலைவி அவர்களும் இது குறித்து தக்க நடவடிக்கை எடுகவில்லை எனவும், ஊராட்சி மன்ற கட்டிடமும் தினமும் செயல்படுவது இல்லை எனவும், மேலும் அங்குள்ள பள்ளியில் செயல்படும் சத்துணவு கூடத்தில் குடிநீர் இணைப்பு வசதியும் இல்லை எனவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுமார் 3 ஆண்டு காலம் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவி அபிராமி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அழைப்பை அவரது கணவர் தமிழரசன் அவர்கள் அழைப்பை எடுத்து பேசினார், இது குறித்து அவரிடம் கேட்டபொழுது சாலை அமைப்பது ஊராட்சியில் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், அது வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டதாகவும் தாங்கள் இறுதி 'பில்'லில் கையெழுத்து மட்டும் இடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிப்பதை கேட்டபொழுது, அலுவலகம் எப்போதும் திறந்திருந்தது, எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எங்கள் மீது வீண்புகார் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற தலைவியின் பணியில் இருப்பவர்களின் கணவர்கள் ஊராட்சி மன்ற அதிகாரத்தில் தலையிடுவது மக்களாட்சி தத்துவதிற்கு எதிரானதும், அவமதிபத்தும் ஆகும்.
இது போன்ற நடவடிக்கைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் மாவட்ட நிர்வாகமும் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

