Type Here to Get Search Results !

அறநிலை துறைக்கு சொந்தமான 55.70 ஏக்கர் நிலம் முதன்முறையாக ஏலம்.

பாலக்கோடு அருகே திருமல்வாடி ஊராட்சி, பெல்லு அள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கொல்லி மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் சின்னப் பையன் அவர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இதுவரை இந்த 55.7 ஏக்கர் புன்செய் நிலம், பசலி 1432க்கு பல விவசாயிகள் பயிர் செய்து வந்த நிலையில் தற்பொழுது இந்து அறநிலையத்துறை தருமபுரி உதவி ஆணையர் உதயகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நிலங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து பொது ஏலத்தில் விடப்பட்டது. 

இந்த ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் 55 .7 ஏக்கர் புன்செய் நிலத்தை 4,72,200 ரூபாய்க்கு 31 விவசாயிகள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தின் கால வரம்பு ஒரு வருடம் நிலத்தை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த பொது ஏலம் நடைபெற்றதையோட்டி மாரண்டஅள்ளி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி, பாலக்கோடு மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா, இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்களான பாலக்கோடு ஆய்வாளர் துரை, பாப்பிரெட்டிப்பட்டி ஆய்வாளர் மணிகண்டன், காரிமங்கலம் ஆய்வாளர் செல்வி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies