தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (22.07.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சு.அனிதா அவர்கள் தலைமையேற்று விவசாயிகளின் கோரிக்கைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்கள்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் பெருமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உடனடி தீர்வு கண்டு, உடனுக்குடன் உரிய நலத்திட்டங்களை, மனுக்கள் மீதான தீர்வுகளை / பதிலுரைகளை வேளாண் பெருமக்களுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சு.அனிதா அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.முகமது அஸ்லாம், தருமபுரி தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு.எஸ்.கணேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

