திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி, வீட்டுவரி உள்ளிட்டவைகள் கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்தார்.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னால் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சொத்துவரி, வீட்டுவரி ஆகியவை கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அவ்வப்போது அதிமுக சார்பில் நடைபெற்றது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் மின் கட்டண உயர்வை அறிவித்தார், இதனை இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர்கள், .மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

