பாலக்கோடு அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் இவரது மனைவி சின்னபாப்பா(72), இவர் உடல் நிலை சரியில்லாததால் தர்மபுரி அரசு மருத்துவமனையில் செல்ல பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நிலையத்தில் காத்திருந்தார், அப்போது ஓசூரிலிருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்போது, அந்த பேருந்தின் ஓட்டுநர் வெங்கடாசலம் பேருந்தை ஓட்டி வந்தார்.
அப்பொழுது பாலக்கோடு பேருந்து நிலைபத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த மூதாட்டி சின்னப்பாப்பாவின் மீது பேருந்து மோதியது, இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சின்னப்பாப்பாவின் தலை மீது பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.
இந்த அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் வெங்கடாசலம் தப்பி ஓடி தலைமறைவானர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.jpg)