Type Here to Get Search Results !

முன்னாள் படை வீரர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.

தமிழகம் மற்றும் புதுவையைச் சார்ந்தவர்களுக்கு Indian Oil Corporation Ltd- இல் Junior Grade (Aviation ) Gr.I பதவிக்கு மொத்தம் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 07 காலிபணியிடங்கள் இதில் முன்னாள் படைவீரர்களுக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:-
+2 with minimum 45% மற்றும் கனரக வாகனங்களில் ஒரு வருடம் பணிபுரிந்தமைக்கான அனுபவம் இருத்தல் வேண்டும். அதற்கான ஓட்டுநர் உரிமம் தகுதிவாய்ந்த Regional Tpt Authority மூலம் வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது அதிக பட்சம் 26க்குள் (As on 30.06.2022) முன்னாள் படைவீரருக்கு Service + 3 years

இணையதள முகவரி
https://www.iocl.com/peopleCareers/job.aspx

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:-
29.07.2022 நேரம் 22.00-க்குள்

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies