தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஜி கே மணி பாப்பாரப்பட்டி அடுத்த பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களான பெரியூர் பிக்கிலி கொல்லப்பட்டி சக்கிலிநத்தம் புதுக்கரம்பு திருமல்வாடி பனைகுளம் கிட்டம்பட்டி தொட்லாம்பட்டி வேப்பிலைஹள்ளி சொரக்காப்பட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று மக்களின் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி தார்சாலை வசதி மற்றும் பேருந்து வசதி உள்ளிட்ட குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியை அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் பாடி செல்வம் தொகுதி அமைப்புச் செயலாளர் சுதா கிருஷ்ணன் பிக்கிலி ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம் மாதேஹள்ளி ஊராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி சஜலலி ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

