பாப்பாரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் விவசாய யநிலங்களில் தண்ணீ் தேங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாப்பரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தன. பாப்பாரப்பட்டி, ஓஜிஅள்ளி, சிட்லகாரன்பட்டி, மாக்கனூர், ஆலமரத்துப்பட்டி, ஒன்னப்ப கவுண்டனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள், ஊர் பெயர் பலகை முறிந்து கீழே விழுந்தன.
பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்கில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர், ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாக்கனூர் பகுதியை சேர்ந்த குப்பன் என்பவருடைய ஓட்டு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஓடுகள் சரிந்து விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதேபோல் மாட்டு கொட்டகையில் மரம் விழுந்து கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்று உயிரிழந்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்களும் சேதம் அடைந்தது.
அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


