பாப்பாரப்பட்டி பகுதியில் டாக்டர் ராமதாஸின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு வைத்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஜ்ஜலஅள்ளி, வேப்பிளைஅள்ளி, நலப்பனநாயக்கனஅள்ளி ஆகிய கிராமங்களில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில். பிறப்பு பூஜை செய்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் ஆகிய உபகரணங்களை கொடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகளை கொடுத்து கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி கவுன்சிலர் வெண்ணிலா ஆறுமுகம். தொகுதி அமைப்புச் செயலாளர் சுதாகர்கிருஷ்ணன் முன்னாள் தலைவர் ஆறுமுகம் தலைவர் கோவிந்தசாமி பெரமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

