Type Here to Get Search Results !

6ஆம் தேதிக்குள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய /நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23ஆம்கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி /பணியிடங்களில் முதுகலை ஆசிரியர் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கல்வித்தகுதி

  1. இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் பட்டயச் சான்று (D.T.Ed) மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் (1) தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில்த ன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள்.
  2. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி (பி.எஸ்ஸி / பி.ஏ. /பிலிட், மற்றும் பி.எட்., சான்று மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் (2) தேர்ச்சி பெற்றவர்கள் மேலும் இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்துவருபவர்கள்.
  3. முதுகலை ஆசிரியர் பதவிக்கு பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி (எம்.ஏ., / எம்.எஸ்ஸி./எம்.காம்., மற்றும் பி.எட்., சான்று மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் மேலும் இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள்.

மேற்காண் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரியகல்வித்தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் (District Educational officer) சமர்ப்பிக்க வேண்டும்.

இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி / மாவட்டக்கல்வி / வட்டாரக்கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் 02.07.2022 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும், குறித்த நேரத்திற்குப்பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது, விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

  1. தருமபுரி கல்வி மாவட்டம் - dharmapurideo@gmail.com
  2. அரூர் கல்வி மாவட்டம் - deoharur@gmail.com
  3. பாலக்கோடு கல்விமாவட்டம் - deopalacode@gmail.com

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies