Type Here to Get Search Results !

அரூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 44 தனியார் பள்ளிகளின், 390-வாகனங்கள் ஆய்வு.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 44 தனியார் பள்ளிகளின்,  390-வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களின் பராமரிப்பு பணிகள், வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர வழிக் கதவுகள், ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம், தீயணைப்பு கருவிகள்  சிசிடிவி கேமரா செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அதே போல் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்குட்பட்ட 44 தனியார் பள்ளிகளை சேர்ந்த 390 வாகனங்களில் 325 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக  ஆய்வு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் படிகட்டுகள், தரைதளம் சரியான அளவு இருக்கிறா என அளவீடு செய்யப்பட்டது. 

வாகனங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குறித்தும்ஷ பேருந்துகளை இயக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் குறைபாடுகள் காணப்பட்ட 25 பேருந்துகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த திருப்பி அனுப்பப்பட்டது. 

உரிய ஆவணங்கள் இல்லாததால் இரண்டு பேருந்துகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்ந்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு செயல்விளக்கம் ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies