Type Here to Get Search Results !

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் (தற்செயல் தேர்தல்) -2022 மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்-2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-ஆவது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு காரிமங்கலம், பைசுஅள்ளி கிராம ஊராட்சிக்குட்பட்ட கெங்குசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (09.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்-2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராக உள்ளாட்சி பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. 

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 19-வது வார்டு அமைந்துள்ள பைசுஅள்ளி கிராம ஊராட்சியிலும், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் பேளாரஅள்ளி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள8 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொரப்பூர் கிராம ஊராட்சியில் காலியாக உள்ள4 -வது மற்றும் 7-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு என மொத்தம் காலியாக 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-வ வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று 09.07.2022சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

இன்று மாலை 6.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகின்றது. இதனை முன்னிட்டு காரிமங்கலம், பைசுஅள்ளி கிராம ஊராட்சிக்குட்பட்ட கெங்குசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 19-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு

ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி இத்தேர்தல் வாக்குப்பதிவினை சிறப்பாக நடைபெற தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அலுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி செயலர் / உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான காரிமங்கலம் வட்டார தேர்தல் பார்வையாளர் திரு.எம்.மாரிமுத்துராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை)/ தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எஸ்.லோகநாதன், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.பெ.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884