Type Here to Get Search Results !

இரட்டை கொலை; 6 பேர் கைது, இரிடியம் விவகாரமா என விசாரணை.

கடந்த 19ஆம் தேதி நல்லம்பள்ளி அடுத்த  பூதனஅள்ளி வனப்பகுதி அருகே உள்ள பழைய கல்குவாரி அருகே 2 ஆண் சடலம் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவலின் அடிப்படையில் இரு பிரேதங்களையும் கைப்பற்றி விசாரணையை துவக்கினர், மேலும் சடலங்களுக்கு அருகில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இறந்தவர்கள் கேரளாவை சார்ந்தவர்கள் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து அவர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், செல் போன் சிக்னல்களை வைத்தும், கொலையானவர்களின் அருகில் கிடைத்த ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

முதற்கட்டமாக இந்த கொலை இரிடியம் மோசடி விவாகாரத்தில் நடந்திருக்கலாம் என தகவல் வெளியானது. வழக்கில்  சந்தேகத்தின் பேரில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் மற்றும் இலட்சுமணன்  ஆகிய இருவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த அதியமான்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ரகு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப், சுரேன்பாபு, விஸ்னுவர்மன் ஆகிய 4 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

தருமபுரி மாவட்ட காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தருமபுரி அழைத்துவந்து 6  பேரையும் தருமபுரி 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் விரைவில் அவர்களும் கைது செய்யபடுவார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies