மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி கழகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பொருளாதார வளாச்சி அடையும் வகையில் சுய தொழில் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி கழகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் (மத்திய கூட்டுற வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி) வங்கி விதிமுறைகளின் படி, புதிய திட்டமாக வீட்டு கடன் பெறும் வசதி செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளை அனுகி வீட்டு கடன் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

