Type Here to Get Search Results !

தேர் விபத்து : பாதிக்கப்பட்டவர்களுக்கு GK.மணி நேரில் ஆறுதல்.

பென்னாகரம் தொகுதி மாதே அள்ளி காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் தேர் சாய்ந்து இருவர் உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு உதவி தொகையும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஜி.கே.மணி.


பென்னாகரம் தொகுதி மாதே அள்ளி காளியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக திடீரென தேர் சாய்ந்து விழுந்ததில் 6 பேர் அடிபட்டு இரண்டு பேர் உயிரிழந்தார்கள் என்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது அந்த இடத்தில் தேர் சாய்ந்து அதை பார்த்து தீயணைப்பு துறை காவல் துறை பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து 6 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். 


பென்னாகரம் மாவட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கும் (டீன்) இருப்பிட மருத்துவர் (RMO) தகவல் கொடுத்து தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஆறு பேரில் மனோகரன், சரவணன் ஆகிய இருவர் மருத்துவமனை வருவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக எனக்கு செய்தியைச் சொன்னார்கள் இதைக் கேட்டவுடன் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியது அதன்பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இடம் பேசி 4 பேரையும் மருத்துவமனை சிகிச்சைப் பிரிவில் பார்த்து தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். 


உயிரிழந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மனோகரன், சரவணன் ஆகிய இருவரும் கூலித் தொழில் செய்து வாழும் மிகுந்த ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அரசு அந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் வீதம் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies