பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாடநூல் வழங்கப்பட்டது.
புதிய கல்வி ஆண்டு முதல் நாள் மாணவர் சேர்க்கை, எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குதல், தமிழக அரசின் இலவச பாடநூல் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாடநூல்கள் வழங்கி இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார். புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், வளர்மதி, பழனிச்செல்வி, திலகவதி, ரதி உட்பட ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

