Type Here to Get Search Results !

தேர் விபத்து விவகாரம்: அமைச்சர் MRK பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி கிராமத்தில் நேற்று நடைபெற்ற காளியம்மன் கோவில் தேர் திருவிழாவில் தேர் நிலைதடுமாறி சாய்ந்ததில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர் அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இதில் 4 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் இறுதிச்சடங்கிற்கு கட்சியின் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கினார் மேலும் பலத்த காயம் பெற்று சிகிச்சை பெற்று வரும் நால்வருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி நலம் விசாரித்தார் மேலும் மருத்துவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் படியும் அறிவுறுத்தினார் 

மேலும் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழாவில் நேற்று தேர் நிலைதடுமாறி சாய்ந்து உள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் நடந்த சம்பவத்தை அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நேரில் சென்று நீதி வழங்கி ஆறுதல் கூறும் வகையில் உத்தரவிட்டதை அடுத்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கி ஆறுதல் கூறினோம் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளோம் மேலும் கடந்த 8ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுப்படி தேரிழுக்க உத்தரவு பிறப்பித்தை அடுத்து திருவிழா நடைபெற்றது எதிர்பாராதவிதமாக துயரச்  சம்பவம் நடைபெற்றுள்ளது இது சம்பந்தமாக காவல்துறைக்கு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது மேலும் திருவிழாக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே விழாக்களை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்ப சேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் தர்மபுரி நகர செயலாளர் அன்பழகன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies