தருமபுரி மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்களின் மனுக்கள் ஒருவார காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் Public Portal எடுக்கப்பட்டுள்ளது. தற்போது "அரசு இ-சேவை மையங்களிலேயே" உரிய ஆவணங்களுடன் புதிய குடும்ப அட்டைகள் (Smart Cards) வேண்டி இணயதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு கட்டணம் ரூ.60/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / முகவரி மாற்றம் / தொலைபேசி எண் மாற்றம் / ஆதார் எண் சேர்த்தல் / நகல் அட்டை கோருதல் போன்ற பணிகளுக்கு இணையத்தில் பதிவு செய்ய தலா ரூ.30/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள் மேற்கொண்டு தகவல்கள் தேவைப்படின், அனைத்து பணிகளுக்கும் பொறுப்பான தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்
தருமபுரி 9445000217,
பென்னாகரம் 9445000218,
பாலக்கோடு 9445000219,
அரூர் 9445000220,
பாப்பிரெட்டிப்பட்டி -9445000221,
காரிமங்கலம் 9445796431,
நல்லம்பள்ளி - 9445796432.
குடும்ப அட்டைகள் தொடர்பாக தனியார் இணையதள சேவை மையங்கள் (CSC) மற்றும் இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடைத்தரகர்கள் / மூன்றாம் நபர்கள் தங்களின் கோரிக்கை குறித்து அலுவலர்களை தனக்கு தெரியும் பணிகளை நான் முடித்து தருகின்றேன் என்பவருடைய விபரங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் "1077". 04342 233299 -ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

