அவ்வாறு புகார் தெரிவிக்கும் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் முகவரி இரகசியமாக பாதுகாக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையினை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தின் எண்ணிக்கை கடந்த வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டில் கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் 50 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 41 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, நடந்து முடிந்த 9 குழந்தை திருமணங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குழந்தை திருமணத்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி வருங்காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 18 வயதும் ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு உதவி புரியும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் 2006 ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை, 1 லட்சம் வரை அபராதமும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குழந்தை திருமணம் முடிந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தால் POCSO சட்டம் 2012 கீழ் குறைந்த பட்ச தண்டணை 7 ஆண்டுகள், அதிகபட்சம் தண்டனை ஆயுள் தண்டணைக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் உடன் தெரிவிக்க வேண்டிய இலவச உதவி எண்கள் 1098, 1077, 181, 100 ஆகிய எண்களுக்கும் மற்றும் 04342 233088 என்ற எண்ணிற்கும் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும் சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் முகவரி இரகசியமாக பாதுகாக்கப்படும்.
எனவே தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் என்பதே இல்லாத நிலையினை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

