தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தன. இந்த மழையால் அரூர் அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான களிமண்ணால் கட்டப்பட்ட ஓட்டு வீடு நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக ஊறி இடிந்து விழுந்து. இதில் வீட்டிலிருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சேதமாகின.
நள்ளிரவு நேரத்தில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் கீழே விழும் சத்தத்தை கேட்ட செல்வம் மற்றும் அவருடைய மனைவி, மூன்று பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே வந்த சிறிது நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினர். இது சம்பந்தமாக காலையில் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தும் நேரில் வந்து பார்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதால் கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்தி வருவதாகும், தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வருகிறோம் என தெரிவித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நிவாரணம் அல்லது மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஒதுக்கப்படும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

